மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
முஹம்மத் நஷீட்டை விடுதலை செய்ய
நீதிமன்றம் உத்தரவு
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாலைத்தீவு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீட், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
முஹம்மத் நஷீட்டின் ஆட்சிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாலைத்தீவு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment