கொள்ளுப்பிட்டி சீன உணவகத்தில்

இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்



கொள்ளுப்பிட்டி-வாலுகாராம வீதியில் உள்ள விடுதி ஒன்றின் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த எறும்புண்ணியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த தலைமை சமையற்காரர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சீன உணவகத்துக்கு அந்த எறும்பு உண்ணியை சீன சமயல் காரர் கொண்டுவருவதை அப்பகுதியில் இருந்த சிலர் கண்டுள்ள நிலையில், அவர்களால் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த தகவலுக்கு அமைவாக குறித்த சீன உனவகத்தை முற்றுகையிட்ட பொலிஸார் எறும்புண்ணியை மீட்டுள்ளனர்.

4 அடி நீலமான இந்த எறும்புண்ணி, 6 கிலோ வரை எடை கொன்டது என தெரிவிக்கும் பொலிஸார் அந்த உயிரினத்தை வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். கைதான சீனப் பிரஜையை கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top