மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை
இந்தியா அனுப்ப வேண்டும்:
முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோள்
மாலத்தீவில்
சிறைபிடிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, சுப்ரீம்
கோர்ட் நீதிபதி
உள்ளிட்டோரை விடுவிக்க ராணுவ துணையுடன் தூதுவரை
இந்தியா அனுப்ப
வேண்டும் என
முன்னாள் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாலத்தீவில்
12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை
அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன்,
கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள
எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று
உத்தரவிட்டது. இதனால் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் பதவி
பறிபோகும் சூழல்
உருவானது.
எனவே
அவர் நீதிமன்ற
உத்தரவை ஏற்க
மறுத்ததுடன், 15 நாட்களுக்கு
நெருக்கடி நிலையை
பிரகடனம் செய்தார்.
அரசு அலுவலகங்கள்
அனைத்தும் ராணுவம்
மற்றும் பொலிஸாரின்
கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சி
எம்.பி.க்களை கைது
செய்யும் பணியில்
ராணுவம் இறங்கியது.
முன்னாள்
ஜனாதிபதி மவுமூன்
அப்துல் கயூமை
மாலத்தீவு பொலிஸார் நேற்று
நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மவுமூன்
அப்துல் கயூம்,
ஜனாதிபதி யாமீனின்
சகோதரர் ஆவார்.
இதையடுத்து,
இன்று அதிகாலை
மாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
நீதிபதி அப்துல்லா
சயீத், நீதிபதி
அலி ஹமீது
ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி ஹசன்
சயீத் உசைனும்
கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில்,
ஜனநாயக முறைப்படி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாலத்தீவின் முதல் ஜனாதிபதி முஹம்மது நஷீத்
தீவிரவாத வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம்
ஆண்டு 13 ஆண்டு
சிறை காவலில்
அடைக்கப்பட்டார்.
சில
வெளிநாடுகளில் அழுத்தத்துக்கு இணங்கி, உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு
அவர் செல்ல
மாலத்தீவு அரசு
அனுமதி அளித்தது.
பிரிட்டன் அரசால்
அரசியல் தஞ்சம்
அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில்
தங்கியுள்ளார்.
அவர்
நாடு திரும்பினால்
கைது செய்து
சிறையில் அடைக்கப்படுவார்
என்று தற்போதைய
ஜனாதிபதி அப்துல்லா
யாமீன் முன்னர்
அறிவித்திருந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி
தேர்தலில் அப்துல்லா
யாமீனை எதிர்த்து
போட்டியிடப் போவதாக முஹம்மது நஷீத் சமீபத்தில்
அறிவித்தார்.
இந்நிலையில்,
மாலத்தீவில் நேற்றிரவு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்து நடைபெற்றுவரும் கைது
நடவடிக்கைகளை கண்டு இலங்கையில் தங்கியுள்ள முதல்
ஜனாதிபதி முஹம்மது நஷீத் அதிர்ச்சி
அடைந்துள்ளார்.
மாலத்தீவில்
சிறைபிடிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி
உள்ளிட்ட அரசியல்
கைதிகள் மற்றும்
சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு
தூதுவரை இந்தியா
அனுப்ப வேண்டும்
என முஹம்மது
நஷீத் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
மாலத்தீவில்
அவசரநிலை பிரகடனப்படுத்தி,
அடிப்படை சுதந்திரத்தை
பறித்ததுடன் சுப்ரீம் கோர்ட்டையும் முடக்கியுள்ள அப்துல்லா
யாமீனின் அறிவிப்பு
ராணுவ ஆட்சிக்கு
இணையாக உள்ளது.
இதை மாலத்தீவு
மக்களில் யாரும்
எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளவோ, கடைபிடிக்கவோ
மாட்டார்கள்.
அப்துல்லா
யாமீனை நாம்
பதவியில் இருந்து
நீக்க வேண்டும்.
இதற்காக உலக
நாடுகளை - குறிப்பாக,
இந்தியா மற்றும்
அமெரிக்காவின் உதவியை மாலத்தீவு மக்கள் எதிர்பார்க்கின்றனர்
என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment