புதுக்கடை நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் இருவரும் பலி
புதுக்கடை
நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்
மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு
இலக்கானவர் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளனர்.
இன்று
(16) பிற்பகல் 4.50 மணியளவில் இடம்பெற்ற
குறித்த சம்பவத்தில்
காயமடைந்த துப்பாக்கிப்
பிரயோகத்திற்குள்ளான நபர் தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்
சூடு நடத்தியவர் மீது மக்கள் சரமாரியாகத் தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி
பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த
நிலையில் குறித்த
சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று
வந்த நிலையில்
மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த
சம்பவம் தொடர்பில்
வாழைத் தோட்ட
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 comments:
Post a Comment