சாய்ந்தமருதில் போராளிகளை
பலிக்கடாவாக்கப்போகும் ஹக்கீம்
நாளை
சாய்ந்தமருதில் மு.காவின் எழுச்சி மாநாடொன்று
நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த மாநாடானது
சாய்ந்தமருது மக்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும்
செயற்பாடாகும். அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற
வகையில் சாய்ந்தமருது
மக்கள் செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இது அனைவரும்
அறிந்த உண்மை.
அமைச்சர் ஹக்கீம்
வரப்போகிறார் என்ற செய்தி கேட்டாலே, அந்த
மக்கள் வீதிகளில்
கம்பு தடியுடன்
வலம் வருகின்றனர்.
இந் நிலையில்
அங்கு ஒரு
எழுச்சி மாநாடொன்றை
நடாத்தச் செல்வது,
அவர்களை வேண்டுமென்றே
வம்புக்கு இழுக்கும்
செயல் என்பதில்
யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
ஏன்
அமைச்சர் ஹக்கீம்
அங்கு எழுச்சி
மாநாடொன்றை நடாத்த வேண்டும்? சாய்ந்தமருதில் உள்ள
ஆதரவாளர்களை கொண்டு மாத்திரம் ஒரு பிரச்சார
கூட்டத்தை நடத்தினால்,
அங்கு மு.கா பலத்த
அவமானத்தை சந்திக்க
நேரிடும். அது
இத் தேர்தலில்
ஏனைய இடங்களிலும்
அதிக தாக்கம்
செலுத்தக் கூடிய
வாய்ப்புள்ளது. வெளியூர் மக்களையும் அழைத்துக் கொண்டு
சென்றால், மக்கள்
இல்லையே என்ற
அவமானத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.
இங்கு இன்னுமொரு
விடயமுமுள்ளது. அமைச்சர் ஹக்கீம் தனித்துச் செல்லும்
போது அந்த
மக்களின் எதிர்ப்பை
அவராலும், சாய்ந்தமருது
போராளிகளாலும் சமாளித்துக்கொள்ள முடியாது என்பது யதார்த்தம்.
அதிகமான போராளிகளையும்
அழைத்துச் சென்றால்,
அவர்கள் புதினம்
பார்த்து முடிப்பதற்குள்,
அமைச்சர் ஹக்கீமின்
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச்
சென்றுவிடுவார்கள்.
தலைவரை
காப்பாற்ற போராளிகள்
தலை கொடுப்பார்கள்.
இங்கு பிரச்சினைப்பட்டு
மாயப்போபவர்கள் அப்பாவி போராளிகளே ! இனியென்ன அவர்கள்
கோடு கேசென்று
அலைவார்கள். இவர்கள் கோடியுடன் கும்மாளமடிப்பார்கள். சாய்ந்தமருதில் ஒரு குழப்பகரமான நிலை
நிலவுகிறது என நன்கு அறிந்து கொண்டு
போராளிகளை அழைத்துச்
செல்வதைப் போன்ற
ஒரு உச்ச
சுய நலம்
வேறு யாருக்கும்
இருக்காது. அமைச்சர் ஹக்கீம் அந்த வீதியால்
கூட பயணிக்க
அஞ்சி சொறிக்கல்முனையால்
மருதமுனை செல்கிறார்.
நடு நிசியில்
சாய்ந்தமருதில் கள்ளக் கோழி பிடித்தார். தனது
பாதுக்காப்புக்கு இத்தனையும் செய்த அமைச்சர் ஹக்கீம்,
இப்போது அந்த
ஊருக்குள் தனது
வெளியூர் ஆதரவாளர்களுடன்
புகுகிறார். இதனை விட சுயநலம் இருக்க
முடியுமா? தான்
செல்ல அஞ்சிய
இடத்துக்கு, வெளியூர் மக்களை அழைத்து செல்வது
தான், ஒரு
தலைவரின் வழி
காட்டலா? இது
தான், தங்களது
தலைமையை போராளிகள்
அறிந்துகொள்ள சரியான தருணமாகும்.
இருந்தாலும்
இங்கு ஒரு
உண்மையையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். அமைச்சர்
ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு
தேவையான நேரம்
சென்று வர,
சாய்ந்தமருது மக்கள் அனுமதித்திருக்க வேண்டும். அது
ஒரு வேட்பாளரினுடைய,
தேர்தல் கேட்கும்
கட்சியினுடைய உரிமை. இந்த உரிமையை யாரும்
தடை செய்வது
சட்டப்படி குற்றமெனலாம்.
அவர் தனது
பக்க நியாயத்தை
கூறும் சந்தர்ப்பம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவரது
நியாயங்களை ஏற்குமளவு சாய்ந்தமருதில் ஏமாளிகள் இருக்க
மாட்டார்கள். அவர் தானாக அவமானப்பட்டு சென்றிருப்பார்.
இப்படி ஒரு
எழுச்சி மாநாடொன்றை
நாடாத்தும் சிந்தனை கூட எழுந்திருக்காது.
சாய்ந்தமருது
மக்கள் போராட்டம்
ஏனையவற்றை போன்ற
ஒரு போராட்டமாக
நோக்க முடியாது.
அது ஏனைய
ஊர்களும் முன்
மாதிரியாக கொள்ளத்தக்க,
பள்ளிவாயல் தலைமையால் வழி நடாத்தப்படுகின்ற ஒரு போராட்டமாகும். ஒரு பள்ளிவாயல்
போராட்டத்தை முன்னின்று நடாத்துகின்ற போது, அதற்கென்று
தனித்துவமான பண்புகள் இருந்தாக வேண்டும். அதில்
வன் முறைகள்
கட்டாயம் தவிர்க்கப்படல்
வேண்டும். சாய்ந்தமருதில்
வன்முறையற்ற போராட்ட சிந்தனை ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்டிருந்தால்,
இதனைப் போன்ற
ஒரு முன்
மாதிரியான போராட்டம்
வேறு எங்கும்
இருக்காது.
இதுவரை
இடம்பெற்ற வன்முறைகளுக்கு
பள்ளிவாயல் தலைமைகளை குறை கூற முடியாது.
குறித்த வன்முறைகளில்
ஈடுபட்டோரே காரணமானவர்கள். அவர்களை சரியான பாதையில்
கொண்டு செல்லும்
முயற்சிகளை சரியான விதத்தில் செய்யவில்லை என்பதே,
பள்ளிவாயல் தலைமைகள் மீதான குற்றச் சாட்டாகும்.
மக்களின் உணர்ச்சிகளை
இலகுவில் கட்டுப்படுத்தவும்
முடியாது. நாளை
எந்த விதமான
சர்ச்சைகளும் இடம்பெறாத வகையில் பள்ளிவாயல் தலைமைகள்
மிக நேர்த்தியான
வழி காட்டல்களை
மேற்கொள்ள வேண்டும்.
எதிர்ப்பை காட்டுவதென்றால்
ஆயிரம் வழிகளை
கையாளலாம். அமைச்சர் ஹக்கீமுக்கு வாக்குகள் மூலம்
அடிக்கும் அடியை
தவிர வேறு
எந்த அடியும்
அந்தளவு வலிக்காது.
அதே நேரம்
நாளை மு.காவின் பிரச்சார
கூட்டம் நடைபெற்றால்,
அதை வைத்து
மு.காவின்
ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பது எதிர்காலத்தில் மிகப்
பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்தும்.
இன்று
குறித்த கூட்டம்
நடைபெறும் இடத்துக்கு
பிரதி அமைச்சர்
ஹரீஸ் விஜயம்
செய்துள்ளார். எந்தவிதமான சல சலப்புக்களும் இடம்பெறவில்லை.
இதே நிலை
நாளை தொடரும்
என்றே நம்பப்படுகிறது.
சாய்ந்தமருதில் பதட்ட நிலையை ஏற்படுத்த முனையும்
அமைச்சர் ஹக்கீமின்
தந்திரத்துக்குள் சாய்ந்தமருது மக்கள் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது.
துறையூர்
ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 comments:
Post a Comment