பொருளாதார நெருக்கடிக்கும்
வறுமைக்கும் தீர்வு காணும்போது
தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம்
- ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் தீர்வு காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு
முதலீடு நாட்டுக்கு
அத்தியாவசியமானதாகும். தேசிய கைத்தொழிலாளர்களை
பாதுகாப்பதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நேற்று ஆரம்பமான
2018 பாதணிகள் தொடர்பான சர்வதேச கண்காட்சிகயை திறந்து
வைக்கும் நிகழ்வில்
ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே
இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய
பொருளாதாரத்தை வலுப்படுத்தும்போது உள்நாட்டு
கைத்தொழிலை அடிப்படையாகககொண்ட கொள்கைக்கு
அமைய செயற்படுவது
அவசியம் என்று
தெரிவித்த ஜனாதிபதி
நாட்டை அபிவிருத்திப்
பாதையில் முன்னெடுத்துச்
செல்லும்போது நாட்டின் வளங்களை முறையாக முகாமைத்துவம்
செய்வதும் உரிய
வளங்களை பயன்படுத்தி
முதலீடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி
கூறினார்.
உள்நாட்டு
கைத்தொழிலாளர்களுக்கு பாதிப்பi ஏற்படுத்தும்
வெளிநாட்டு முதலீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை
நாட்டின் பொருளாதார
நெருக்கடிக்களும், வறுமைக்கும் தீர்வு
காணும்போது தேசிய கைத்தொழில் துறையை வலுவூட்டுவது அவசியம்
என்றும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று
முதல் எதிர்வரும்
04ஆம் திகதி
வரை நடைபெறும்
இக்கண்காட்சி முற்பகல் 10 மணி முதல் இரவு
9 மணிவரை பொதுமக்களுக்காக
திறந்திருக்கும்.
கைத்தொழில்,
வர்த்தக வாணிபத்துறை
அமைச்சர் ரிசாத்
பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேரசிங்க,
அமைச்சின் செயலாளர்
ரஞ்சித் அசோக்க,
இலங்கை பாதணிகள்
தோல் பொருள்
உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜீ. நிமலசிறி ஆகியோர்
இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment