தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் 

வெற்றிடங்கள்விரைவில் பூர்த்தி செய்யப்படும்

- கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் பெருமளவில் காணப்பட்டன. கடந்த இரண்டு வருட காலப்பகுதயில் இதற்கு ஏற்ற தகுதியான தரத்தை கொண்டவர்கள் இருக்கவில்லை. இதன் காரணமாக அதிபர்கள் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்வி நிர்வாக சேவையில் 852 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு ஒரு வருடகால பயிற்சி வழங்கப்பட்டது. அதிபர் தரம் III க்கு சுமார் 4 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.விரைவில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 353 ஆகும். நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 121 ஆகும்.
நிரந்தர அதிபர் இல்லாத தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.இதற்காக அறிவிப்பை வெளியிடுவதற்காக தேசிய பாடசாலை பட்டியல் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசசேவை ஆணைக்குழவின் கல்வி சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பட்டுயிருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
https://www.facebook.com/akilavirajk/videos/10156323559524060/



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top