ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்?
முடிவுக்கு வரும் குழப்பம்
உள்ளூராட்சித்
தேர்தலை அடுத்து,
அரசியலில் ஏற்பட்ட
குழப்ப நிலை
தற்போது, மீண்டும்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை
எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில்
விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம்
செய்து விட்டு,
கூட்டு எதிரணியின்
ஆதரவுடன், நிமால்
சிறிபால டி
சில்வாவை பிரதமராகக்
கொண்ட
அரசாங்கத்தை அமைக்க, சிறிலங்கா
சுதந்திரக் கட்சி முற்பட்டதால், நேற்று முன்தினம்
கொழும்பு அரசியலில்
பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
அமைச்சர்
சுசில் பிரேம
ஜெயந்த இதற்கான
நடவடிக்கைகளை, மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசி
முன்னெடுத்திருந்தார்.
இதற்கமைய,
கூட்டு எதிரணியின்
தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்
சந்தித்து பேச்சு
நடத்தி, நிமால்
சிறிபால டி
சில்வாவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு
ஆதரவு அளிக்க
இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து,
பிரதமரை பதவி
நீக்கம் செய்வதற்கான
வாய்ப்புகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும்
சட்ட நிபுணர்களுடன்
தாம் ஆலோசனை
நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
எனினும்,
பிரதமர் தாம்
பதவி விலகப்
போவதில்லை என்றும்,
அரசியலமைப்புக்கு அமைய தமது கடமைகளை முன்னெடுக்கப்
போவதாகவும் அறிவித்தார்.
இந்த
நிலையில், நிமால்
சிறிபால டி
சில்வாவைப் பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு கோரும்
கடிதத்தில், போதிய கையெழுத்துக்களைப் பெற முடியாத
நிலையில், இந்த
முயற்சி பின்னடைவைச்
சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை,
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, ஐதேகவின் உள்மட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களை
தீர்த்து, தமக்கான
ஆதரவை உறுதிப்படுத்துவதில்
வெற்றிபெற்றுள்ளார் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதையடுத்து,
நேற்று ரணில்
விக்கிரமசிங்கவைப் பிரதமராகத் தொடர்வதற்கு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன ஆதரவை
வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிமால்
சிறிபால டி
சில்வாவை பிரதமராக
கொண்ட அரசாங்கத்தை
அமைக்கும் திட்டத்துக்கு
சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்
சிலர் ஆதரவளிக்க
முன்வராததை அடுத்தே, மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை
மாற்றத்தை ஏற்படுத்தி
தற்போதைய அரசாங்கத்தை
முன்னெடுக்க இணங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
சிறிலங்கா
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான
துமிந்த திசநாயக்க,
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
பொதுச்செயலரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர,
சரத் அமுனுகம,
மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட
அமைச்சர்களே இவ்வாறு எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர்.
அதேவேளை,
தம்மை பிரதமராக
ஏற்றுக் கொள்ள
இணங்கியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த
துமிந்த திசநாயக்க, மஹிந்த அமரவீர,
சரத் அமுனுகம,
மஹிந்த சமரசிங்க, மோகன்லால்
கிரேரோ உள்ளிட்ட
தலைவர்களுக்கு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்
இராப்போசன விருந்து
வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து,
தற்போதைய அரசியல்
குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment