15 வீத வரி விதிப்பை அடுத்து
தங்கத்தின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது அரசாங்கம் 15 வீத வரிவிதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
15 வீத வரி விதிப்பை அடுத்து 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை, 62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது.
8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 – 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது. இது முன்னர், 50,000 – 51.000 வாக இருந்தது.
அதேவேளை தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்க கடத்தல் அதிகரிக்கும் என்றும் சட்டவிரோதமாக இறக்குமதிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இறக்குமதி தங்கத்தின் மீது 10 வீத வரியும், 3 வீத மதிப்புக்கூட்டு வரியும் விதிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் இருந்து தங்கக் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது, இலங்கையில் 15 வீத வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment