மனைவி மற்றும் 2 குழந்தைகளை
கொலை செய்த நபருக்கு
31 ஆண்டுகள் சிறை தண்டனை
இங்கிலாந்தில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 30 வயதான சமி சலீம் தனது 30 வயதான மனைவி அரினா சயீத், 7 வயதான மகள் ஷாதியா மற்றும் 4 வயதான மகன் ரமி ஆகியோரை கொலை செய்த பின்னர் வீடு முழுதும் பெட்ரோல் உற்றி தீ வைத்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து அவரை காப்பாற்றி உள்ளனர்.
வீட்டின் ஒரு அறையில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் எரிந்த நிலையிலும் இருந்ததையும் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த பொலிஸார் மயக்க நிலையில் இருந்த சமி சலீமை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது சமீ சலீம் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியளித்துள்ளது.
இயல்பாகவே சமி சலீம் அவரது மனைவி மீது சந்தேகம் மற்றும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் மன போக்கிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி செல்போன் பயன்படுத்தவும் வெளியே எங்கும் செல்லக்கூடாது எனவும் தடைவிதித்துள்ளார். ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அவரது மனைவி செல்போன் பயன்டுத்தியது சலீமுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.
அதன் பின்னர் பெட்ரோல் வாங்கிவந்து வீடு முழுவதும் ஊற்றிவிட்டு பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாயை பொத்தி இழுத்துச்சென்று பாத் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சடலங்களை ஒரு அறையில் அடுக்கியுள்ளார். அதன் பின்னர் சாப்பிட்டு கொண்டே தொலைக்காட்சி பார்த்த சலீம் இறுதியாக எரிவாயு இணைப்பையும் துண்டித்து வீட்டிற்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் அதிக புகை ஏற்பட்ட காரணத்தினால் சலீம் இருந்த அறைக்கு தீ பரவவில்லை. இந்த கொடூர சம்பவத்தை செய்த சலீம் ஒரு வித மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கைது செய்து விசாரிக்கும் போது தெரியவந்துள்ளது.
ஆனாலும் ஒரு வருடமாக நடைபெற்ற இந்த விசாரணையில் லிவர்போல் கிரவுன் நீதிமன்றம் 3 கொலைகளை செய்துள்ள குற்றத்திற்காக சலீமுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment