உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணி
இன்றுடன் நிறைவு
கடந்த தேர்தலைத் தொடர்ந்து புதிய உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் பணி இன்றுடன் முடிவடைவதாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஒரு மாதத்திற்குள் உள்ளுராட்சி சபைகளை அமைப்பது அவசியமாகும்.
ஆட்சியமைக்க தவறிய உள்ளுராட்சி மன்றங்களை நடத்திச்செல்லும் அதிகாரம் ஆணையாளர்களுக்கு வழங்கப்படும் என, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானியில் வெளியிட சில உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு முடியாமல் போயுள்ளது.
பெண் பிரதிநிதிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன
இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு கூறியுள்ளது.
அமர்வுகள் பிற்போடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வர்த்தமானியில் வெளியிட தாமதமான பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.
இம்முறை 340 உள்ளுராட்சி சபைகளுக்காக தேர்தல் நடந்தது. நீதிமன்ற உத்தரவு காரணமாக பெந்தர - எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment