கல்முனை மாநகர சபை
பொதுச் சந்தையின் அலங்கோலம்
இலங்கை முஸ்லிம்களின்
முகவெற்றிலைப் பிரதேசம் எனக் கூறப்படும் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கல்முனை மாநகரத்தில் அமைந்திருக்கும் பொதுச் சந்தையின்
அலங்கோலம் குறித்து இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுவருகின்றனர்.
கல்முனையில் நாம் 15 ஆம் நூற்றாண்டிலா வாழ்கின்றோம் என என்னத்தோன்றுகிறது.
கல்முனை அபிவிருத்தி குறித்து பேசப்பப்படும்போது எம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்
மர்ஹும் ஏ ஆர் மன்சூர் அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வெறும்
நான்கு வருடத்துக்குள்தான் கல்முனை பொதுச் சந்தையை அந்த காலத்தில் இலங்கையில் பேசப்பட்ட
நவீன சந்தையாக கட்டிமுடித்தார், ஆனால் அதே சந்தையை கடந்த 18 வருடமாக ஆட்சி அதிகாரத்தில்
இருந்தவர்களால் புனரமைக்கக்கூட முடியாமல் வியாபாரத்துக்கு உதவாத சுகாதாரமற்ற சந்தையாக
இச்சந்தை மாறியுள்ளதை பார்க்கும்போது வெட்கமும் வேதனையுமாகவுள்ளது. அரசியல்வாதிகளின்
செயல்திறமையையும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
கல்முனைப் பிரதேசத்தில் கூடுதலான மக்கள் வர்த்தக சமூகமாக இருக்கும்
நிலையில் இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இம்மக்களின் வியாபார கேந்திர இடமான கல்முனைப் பொதுச் சந்தையை
நவீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்தி செய்வதில
அக்கறை காட்டாமல் வாய் வீச்சிலும் படம் காட்டுவதிலும் காலத்தைக் கடத்தி வருகின்றனர்
என விடயம் புரிந்தவர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கத்திடம் இருந்து
நிதி பெறுவது கஷ்டமாக இருப்பின் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் அந்தஸ்தைக் காட்டி
முஸ்லிம் நாடுகளினதும் அந்நாடுகளிலுள்ள தனவந்தர்களின் உதவிகளுடனும் இப்ப்டியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முஸ்லிம்
பிரதேசங்களில் மேற்கொள்ள முடியும். ( இதற்கு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமண்ற உறுப்பினரும்
இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகளைக் கவனித்தால் புரிந்து
கொள்ளமுடியும்)
கல்முனை மாநகர சபையில் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ்தான் அதிகாரத்தில்
இருந்து வருகின்றது. இதோ முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மேயர்கள்.
·
A.R. Azmeer
(2006-2006)
·
H. M. M. Harees
(2006-2009)
·
S. Z. M. Mashoor
Moulana (2009-2011)
·
Siraz Meerasahib
(2011-2013)
·
Nizam Kariapper -
(2014-2016)
·
A.M.Rakeeb (2018 )
0 comments:
Post a Comment