நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும்
அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும்
நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம், மே 8ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளும் செல்லுபடியற்றதாகி விட்டன.
இந்த நிலையில், இவற்றை மீண்டும் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின், அவை மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும், அரசியலமைப்பு பேரவைக்கு அந்த நிலை ஏற்படாது என்றும் அது தொடர்ந்து செயற்படும் என்றும் ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment