ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள்
பிரதமராலேயே தெரிவுசெய்யப்பட்டனர்
வாக்களிப்பின்ஊடாகதெரிவுசெய்யப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்
அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவிப்பு



ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலேயே தெரிவு செய்ப்பட்டாதாக அமைச்சர் அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரதி தலைவராக தான் வாக்களிப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாகவே நியமிக்கப்பட்டதுடன், குறித்த யோசனை கட்சியின் மறுசீரமைப்பு குழுவினருடையது அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top