நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா?
– சவால் விடுகிறார்
மஹிந்த ராஜபக்ஸ
வெற்றிபெற
முடியும் என்ற
நம்பிக்கை இருந்தால்,
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு
உடனடியாக தேர்தலை
நடத்த வேண்டும்
என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தங்காலையில்
தமிழ்-சிங்கள
புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய
அவர்,
“கூட்டு
எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற
நம்பிக்கை இருக்கிறது.
எனது
ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை
தற்போதைய அரசாங்கம்
நிறுத்தி விட்டது.
நாட்டைப்
பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு
உடன் தேர்தல்
நடத்தப்பட வேண்டும்.
ஐதேகவுக்குள்
ஆழமான பிளவுகள்
தோன்றியுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தேர்தல்களைப்
பிற்போடத் திட்டமிட்டுள்ளது”
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment