வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தில்
புதிய நுழைவாயில் தளம்
வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் புதிய நுழைவாயில் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளின் நன்மை கருதி இந்த புதிய இணையத்தள கிளை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கையடக்க தொலைபேசி இலக்கம்,வேறு வழிகளில் இலகுவாக உட்பிரவேசித்தல் உட்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்தின் பிரதான பிரிவுகளுடன் தொடர்புபட்ட தகவல்களையும் விபரங்களையும், கன்சியூலர் சேவை தகவல்களை பெற்றுக்கொடுப்பது இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்கள் மற்றும் அந்த நாடுகளின் நாணய மாற்று வீதங்கள், நேர மாற்றங்கள் உட்பட பல தகவல்களும் இங்கு உள்ளடக்க்பபட்டுள்ளன.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாவது:
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான புதிய இடைமுகத்தை தொடங்குதல்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான புதிய இடைமுகமொன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
http://www.mfa.gov.lk என்ற முகவரியே தொடர்ச்சியாக வலைத்தளத்தின் இணையத்தள முகவரியாக (URL) விளங்குகின்றது.
கையடக்கத் தொலைபேசி வாயிலாக மறுமொழியளிக்கவல்லதாகவும், வித்தியாசமான சாதனங்கள் தளங்கள் மற்றும் உலாவிகளின் வாயிலாக நுழைந்து கொள்வதற்கு ஏற்ற வகையிலும் வலைத்தள பயனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனர்-நேய இடைமுகத்தை வழங்குவதற்காகவும் இந்த புதிய இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய விபரங்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளின் தொடர்பு விபரங்கள், வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினதும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள்/நிறுவனங்களினதும் தொடர்பு விபரங்கள் போன்ற முக்கியமான விடயங்களின் பரந்தளவான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக காணப்படும் பரந்துபட்ட கொன்சுலர் சேவைகள் தொடர்பான விரிவான தகவல்கள் போன்றன தற்பொழுது இணையத்தில் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் கூடிய விரைவில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும் உருவாக்கப்படவுள்ளன.
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தொடர்பு விபரங்கள் இலகுவான அணுகுதலுக்காக பட்டியலிடப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகின் பிராந்தியங்களை குறிப்பிட்டு காணப்படும் உலக வரைபடம் ஒன்றின் வாயிலாக தேடுதல்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். பொதுமக்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கும் நோக்கில் தூதரகம் அமைந்துள்ள நாட்டின் தற்போதைய நேரம் மற்றும் பயனர் உள்நுழைந்துள்ள இடத்திலிருந்து குறித்த நாட்டிற்கான நேர வித்தியாசம் போன்றனவும் தூதரகம் தொடர்பான விடயப்பரப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த புதிய இடைமுகமானது சேவை விநியோகம் மற்றும் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல் போன்றவற்றை மேம்படுத்துதல் தொடர்பில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஏப்ரல் 20ஆந் திகதி
0 comments:
Post a Comment