அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்
முச்சக்கரவண்டிகளை திருடியவர்களுக்கு விளக்கமறியல்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மைக்காலமாக முச்சக்கரவண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, 5 சந்தேகநபர்களையும், எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எம். நஸீல் உத்தரவிட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் காணாமல் போன, முச்சக்கர வண்டி தொடர்பாக மேற்கொண்ட விசாரணையையடுத்து அக்கரைப்பற்று, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் இருந்து, 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 10 முச்சக்கர வண்டிகளும், 1 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்படட முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இயந்திர மற்றும் அடிசட்ட இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளின் பதிவு இலக்கங்களும் மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயந்திர மற்றும் அடிச்சட்ட இலக்கங்களை மாற்றியதன் பேரில் 2 சந்தேக நபர்களும், திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.