சிந்துராலபோர்க்கப்பல்
கடற்படையில் புதிதாக இணைந்தது

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலானஎஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் போர்க்கப்பலை கடற்படையில் இணைத்து  ஆணையிட்டார்.
கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் சமந்த பெரேராவிடம் அவரது நியமனத்துக்கான ஆணையையும் பிரதமர் வழங்கினார்.
105.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 18 அதிகாரிகளும், 100 மாலுமிகளும் பணியாற்றவுள்ளனர்சிறிய ஹெலிகப்டர்கள் இதில் இறங்ககூடிய வசதியும் உண்டு.
இந்தப் போர்க்கப்பலை கடற்படையில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் படைத் தளபதிகள், அமைச்சர் மகிந்த அமரவீர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்திய கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார், இந்திய தூதுவர் தரன்ஜித்சிங் சந்து மற்றும் படை அதிகாரிகள், வெளிநாட்டு தூதரங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top