“மைத்திரியே திரும்பிப் போ”
லண்டனில்ஆர்ப்பாட்டம்
கொமன்வெல்த்
மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு
எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர்
தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர் என அங்கிருந்து கிடைக்கும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால
சிறிசேனவை திரும்பிப்
போகுமாறு முழக்கங்களை
எழுப்பியவாறும், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இவர்கள்
ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
“மைத்திரியே
திரும்பிப் போ”, “எமக்கு வேண்டாம் அரசியலமைப்பு,
இறுதித் தீர்வு
தமிழீழமே” என்பன
போன்ற வாசகங்கள்
எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
0 comments:
Post a Comment