ஆபிரிக்கா கண்டத்தின்
 நாகரிகமற்ற பிரதேசங்களின் சாயலில்
கல்முனை பொதுச்சந்தை


நீங்கள் இங்கே காண்பது ஆபிரிக்கா கண்டத்திலுள்ள நாகரிகமற்ற ஒரு பிரதேசத்தின் பொதுச் சந்தை என்று யாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள்.

முஸ்லிம் மக்களின் முக வெற்றிலைப் பிரதேசம் என அரசியல்வாதிகளால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் காலங்களில் வர்ணித்துப் பேசப்படும் கல்முனை மாநகரத்தின் மிக முக்கியமான பொதுச் சந்தையின் அலங்கோலக் காட்சிகளே இவைகளாகும்.
வர்த்தக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கிரிக்கெட் மட்டைகளும், பந்துகளையும் வழங்கி முக நூலில் படம் காட்டுபவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்களே தவிர கல்முனை பொதுச் சந்தையின் அலங்கோலக் காட்சிகள் 18 வருடங்களாகியும் அவர்களின் கண்களுக்கு தெரிவதாக இல்லை என கல்முனை பொதுச் சந்தை வியாபாரிகள் கூறி ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கல்முனையின் புதிய மேயர் வெளிநாட்டில் வசித்துவிட்டு மேயர் பதவி கிடைத்ததும் கல்முனைப்பிரதேசத்திற்கு வரவில்லை. இவர் தொடர்ந்து கல்முனையில் வாழ்ந்தவர். கல்முனை பொதுச் சந்தையின் அவல நிலை குறித்து நன்கு அறிந்தவர். அது மாத்திரமல்லாமல் கல்முனை மாநகர சபையிலும் கடந்த காலத்தில் அங்கம் வகித்தவர் என்றும் வர்த்தகர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 18 வருட காலங்களாக கல்முனை மாநகர சபையில் வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேயர்கள் இருந்தது போலவும் 2018 ஆம் ஆண்டில்தான் முஸ்லிம் காங்கிரஸில்  உள்ளவர் ஒருவர் புதிதாக வரலாற்றில் முதல் முறையாக மேயராக பதவி ஏற்றது போலவும் கல்முனை பொதுச் சந்தையின் அவலநிலை தெரியாதவர் போலவும் கல்முனையின் புதிய மேயர் சந்தையைப் பார்வையிட்டிருப்பதும் அந்தப் படங்களை முகநூலில் பதிவிட்டிருப்பதும் இன்னும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களை ஏமாற்றும் நடவடிக்கையே என விடயம் புரிந்தவர்கள் இவரின் கல்முனை பொதுச் சந்தை பார்வையிடும் விடயம் குறித்து கூறுகின்றனர்.
·         A.R. Azmeer (2006-2006)
·         H. M. M. Harees (2006-2009)
·         S. Z. M. Mashoor Moulana (2009-2011)
·         Siraz Meerasahib (2011-2013)
·         Nizam Kariapper - (2014-2016)

·         A.M.Rakeeb   (2018 )









 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top