கொழும்பு நகரத்தின் பரப்பளவு

இனி இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர்

கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும்.
தற்போது முன்னெடுக்கப்படும் போட் சிற்றி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்துள்ளார்.
போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நில அளவை திணைக்களம் அளவீட்டுப் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரைபடத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் நில அளவையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலப்பரப்பை சட்டரீதியாக்கும் பொருட்டு அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த பணிகளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும். போட் சிற்றி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாகயிருக்கும் என்று நில அளவையாளர் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top