கடல் கொந்தளிப்பு
கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்
அவதானத்துடன் செயற்படுமாறு
திணைக்களம் அறிவிப்பு
பலப்பிட்டியிலிருந்து
மாத்தறை ஊடாக
பொத்துவில் வரையிலான கடல் பிரதேசம் இன்று
இரவு முதல்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில்;; ஓரளவுக்கு கொந்தளிப்புடன்
காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு
தசம் ஐந்துக்கும்,
3 தசம் 5 க்கும்
இடைப்பட்ட மீற்றர்
உயரத்தில் கடல்
கொந்தளிப்புடன் காணப்படக'கூடும் என்று வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து
கொழும்பு மற்றும்
காலி ஊடாக
ஹம்பாந்தோட்டை கடல் பிரதேசத்தில் இரவு வேளையில்
ஓரளவுக்கு மழை
பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்
காரணமாக கடலின்
அலைகள் சிறிய
அளவில் தரைக்கு
வரக்கூடும். இதனால் கடற்றொழிலாளர்கள், கடல் நடவடிக்கையில்
ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment