இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம்
சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம்

மத்தல விமான நிலையத்தில் மூன்று நாட்கள் தரித்து நின்று விட்டு, நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற  ரஷ்யாவின் இராட்சத சரக்கு விமானமான அன்ரனோவ்-225, கராச்சியில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு இந்த விமானம் கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் இரகசியமாக தரையிறக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிடப்படாமல், இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்டதாகவும், பணியாளர்கள் ஓய்வெடுத்த பின்னர் இன்று காலை இது, சவூதி அரேபியாவின் டமாம் நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் பாகிஸ்தான் சஹீன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவசரமாக எரிபொருள் நிரப்புவதற்காகவே மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், மீண்டும் அது கராச்சியிலும் எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
640 தொன் எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்லக் கூடிய இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பற்றிய எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top