குண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள்
8 ஊடகவியலாளர்கள் உட்பட் உட்பட 29 பேர் பலி
ஆப்கானிஸ்தான்
தலைநகர் காபூலில்
நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 11 குழந்தைகள், எட்டு ஊடகவியலாளர்கள்
உட்பட 29 பேர்
உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த
தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது
குண்டுத் தாக்குதல்
தொடர்பில் அறிக்கையிடுவதற்காக
குறித்த இடத்தில்
கூடிய ஊடகவியலாளர்களை
இலக்கு வைத்து
இரண்டாவது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு
தெரிவித்துள்ளது.
குறித்த
தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில்
பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரைப் போல் வந்த ஒருவன் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பிரபல செய்தி நிறுவனமான ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஷா மராய் என்பதும் உள்நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சுமார் 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமது
நாட்டில், ஒரே
தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது
சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு
குழுவின் உறுப்பினர்
ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவாரத்திற்கு
முன்னதாக காபுலில்
வாக்காளர் பதிவு
நிலையம் ஒன்றில்
நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர்
உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment