முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே
பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்
இப்படிச் சொல்கிறார் இரா.சம்பந்தன்...!



திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்மு இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைமார்அபாயாஅணிவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது:
திருகோணமலை ஸ்ரீ சண்மு இந்து மகளிர் பாடசாலை சுமார் 150 வருட பாரம்பரிய வரலாறைக் கொண்டது. அந்த நாட்களில் திருகோணமலையில் உள்ள இந்து மகளிருக்கு ஒரு பாடசாலை தேவையென சைவ இந்துப் பெரியார்களும் நலன்விரும்பிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தனியார் பாடசாலை இது.
எனவே, அதற்கென உள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்படவேண்டும் எனப் பெற்றோரும் பாடசாலை சமூகமும் விரும்புகின்றது. அந்தப் பாடசாலைக்கென உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியம் மரபுகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். இந்த விடயங்கள் பேசப்பட்டு நிதானமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

எத்தனையோ சகாப்தங்களாக இருக்கும் நடைமுறையை திடீரென மாற்றிவிட முடியாது. எனவே, பேசி சில விடயங்களுக்குத் தீர்வை நாம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top