2018.04.24 ஆம் திகதி நடைபெற்ற
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்



01. இலங்கையில் எல்லை முகாமைத்துவ வழிகாட்டல்களினை Integrated Border Management – IBM செயற்படுத்தல் (விடய இல. 06)
2016ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தேசிய எல்லை முகாமைத்துவ குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் எல்லை முகாமைத்துவ வழிகாட்டல்களினை அவுஸ்திரேலியாவின் IOM அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நன்கொடையினை ஆதாரமாகக் கொண்டு செயற்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. '1990 சுவசெரிய மன்றம்' சட்டமூலத்தினை சட்டமயமாக்கல் (விடய இல. 08)
சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள '1990 சுவசெரிய மன்றம்' சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக வேண்டி நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 09)


முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டிலிருந்து .பொ. (உயர்தரம்) க்காக வேண்டி தொழில்நுட்ப பாடப்பரப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த விடய பரப்பினை செயற்படுத்துவதற்காக வேண்டி அடிப்படை வசதிகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும், ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்குமான தேவை எழுந்துள்ளது. அதற்காக 60.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மதிப்பீட்டு தொகையில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒபெக் நிதியமும், மிகுதி தொகையினை இலங்கை அரசாங்கமும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை ஒபெக் நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. ஆரம்ப சுகாதார சேவை முறையினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 14)
தொற்று நோய் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்ப சுகாதார சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இலங்கையில் ஆரம்ப மட்டத்தில் சுகாதார சேவை வசதிகளை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையான இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 'முழு சுகாதார காப்புறுதியினை அடிப்படையாகக் கொண்ட சுகாதார சிகிச்சை வழங்கும் கொள்கையினை' செயற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், ஆரம்ப சுகாதார சேவை முறையினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உலக வங்கியினால் சலுகை நிபந்தனைகளின் கீழ் பெற்றுத் தருவதற்கு இணங்கியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகியவை இணைந்து முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் மற்றும் விச ஆய்வு கற்கைகள் தொடர்பான நிறுவனத்தின் (Institute of Forensic Medicine and Toxicology - IFMT) செயற்பாட்டினை விருத்தி செய்தல் (விடய இல. 15)
நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் மற்றும் விச ஆய்வு கற்கைகள் தொடர்பான நிறுவனத்தின் (Institute of Forensic Medicine and Toxicology - IFMT) செயற்பாட்டினை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்காக, இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. அரசாங்கத்துக்கு உரிய வாகனங்களின் எண்ணிக்கை (விடய இல. 17)
கொம்ப்ரோலர் பணிப்பாளர் நாயக அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்ட 2017/01ம் இலக்க சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின் விதப்புரைகளுக்கு அமைவாக சேகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரித்தான வாகனங்கள் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட பின்வரும் தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டது. யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  
07. காலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினை தடுத்து அப்பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்துக்காக சாத்திய வள அறிக்கையினை மேற்கொள்ளல் (விடய இல. 19)
காலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினை தடுத்து அப்பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்துக்காக சாத்திய வள அறிக்கையினை மேற்கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட MCC சர்வதேச கம்பனிக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை வெளியிடுவதற்கும், இச்சாத்தியவள அறிக்கையினை மேற்கொள்வதற்கு இனங்காணப்பட்டுள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக பிரதேச கைத்தொழில் கிராமங்களில் இருந்து இடங்களை ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 20)


கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக பத்திரிகை விளம்பரங்கள் மூலம் யோசனைகள் பெறப்பட்டுள்ளன. அவ்யோசனைகளில் இருந்து பிரதேச கைத்தொழில் சேவை குழு மற்றும் அமைச்சரவையின் வேலைத்திட்ட மதிப்பீட்டு குழு ஆகியவற்றின் சிபார்சின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 08 வேலைத்திட்டங்களுக்காக 35 வருட குத்தகையின் கீழ் குறித்த பிரதேச கைத்தொழில் கிராமங்களில் இருந்து இடங்களை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. கரும்பு அறைக்கும் திரௌவியங்களை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 24)
கரும்பு அறைக்கும் திரௌவியங்களை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இந்நாட்டின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத் கரும்பு ஆராய்ச்சி அபிவிருத்தி சபை மற்றும் அந்நாட்டின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. முன்மாதிரி கிராமங்களுக்கருகில் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 29)
முன்மாதிரி கிராமங்களுக்கருகில் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக உரிய நிர்வனங்களின் அதிகாரிகள் அடங்கிய செயற்பாட்டு குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. 'அனைவருக்கும் வீடு' மற்றும் 'கிராம சக்தி' முன்மாதிரி கிராமங்களுக்காக காணிகளை ஒதுக்கிக் கொள்ளல் (விடய இல. 31)
'அனைவருக்கும் வீடு' மற்றும் 'கிராம சக்தி' முன்மாதிரி கிராமங்களுக்காக காணிகளை ஒதுக்கிக் கொள்வதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இணை தலைமையில் உரிய அதிகாரிகள் அடங்கிய செயற்பாட்டு குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12. இலங்கை பொலிசுக்காக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக ஆலோசனை சேவை நிர்வனம் ஒன்றை நியமித்தல் (விடய இல. 38)
இலங்கை பொலிசுக்காக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக ஆலோசனை சேவை நிர்வனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய கட்டிட திணைக்களம் ஆகிய நிர்வனங்களின் மூலம் அச்சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கை மினரல் சென்டிஸ் தனியார் கம்பனி வசமுள்ள கனிய மணல்களை விற்பனை செய்தல் (விடய இல. 40)

இலங்கை மினரல் சென்டிஸ் தனியார் கம்பனி வசமுள்ள 17,800 மெட்ரிக் தொன் கனிய மணல்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், உயரிய விலை மனுக்களை முன்வைத்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு விற்பனை செய்வது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 7,000,000 கச்சா எண்ணெய் தாங்கிகளை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 43)
7,000,000 கச்சா எண்ணெய் தாங்கிகளை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், கச்சா எண்ணெய் தாங்கி ஒன்று 1.69 அமெரிக்க டொலர்கள் வீதம் M/s Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd . நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பியகம 220/33kv உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 44)
பியகம 220/33kv உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 1,434.11 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s ABB India Limited நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


16. அரச கைத்தொழிற்சாலை திணைக்களத்தின் செயற்றிறனை விருத்தி செய்வதற்கு அவசியமான இயந்திரங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 45)
அரச கைத்தொழிற்சாலை திணைக்களத்தின் செயற்றிறனை விருத்தி செய்வதற்கு அவசியமான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், Plano Miller, Computer Numerical Control – CNC ஆகிய இயந்திரோபகரணங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக நீண்ட கால ஒப்பந்தங்கள் மூன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 55)
2018ம் ஆண்டின் மார்ச் மாதம் 15ம் திகதியிலிருந்து அடுத்து வருகின்ற 08 மாத கால எல்லைக்கு அவசியமான 4,650,000 டீசல் தாங்கிகளையும், 2,080,000 விமானங்களுக்கான எரிபொருள் தாங்கிகளையும், 1,275,000 பெட்ரோல் தாங்கிகளையும் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், உரிய வழங்குநர்களுடன் நீண்ட கால 03 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top