சவூதி அரேபியாவில் கடந்த 4 மாதத்தில்
48 பேருக்கு மரண தண்டனை
கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு
மரண தண்டனை நிறைவேற்றம்
சவூதி அரேபியாவில்
கடந்த 4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர்
போதைப் பொருள்
கடத்தல் வழக்கில்
தொடர்புடையவர்கள் என அறிவிக்கபடுகின்றது,
சவூதி அரேபியாவில்
கொலை, கொள்ளை,
கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் போன்ற
குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த
நிலையில் நடப்பு
ஆண்டில் கடந்த
4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண
தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்களில் பாதிப்பேர்
போதைப் பொருள்
கடத்தல் வழக்கில்
தொடர்புடையவர்கள்.
இத்தகவலை
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித
உரிமை கண்காணிப்பு
அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே
சவூதி அரேபியாவின் பட்டத்து
இளவரசர் முஹம்மது பின்
சல்மான் சமீபத்தில்
‘டைம்‘ பத்திரிகைக்கு
பேட்டி அளித்தார்.
அப்போது “கொலை
வழக்கை தவிர
மற்ற குற்ற
வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள்
தண்டனையாக குறைப்பது
பற்றி பரிசீலிக்கப்படும்
என்று தெரிவித்துள்ளார்.
சவூதியில் கடந்த
ஆண்டில் மட்டும்
150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம்
ஆண்டு முதல்
இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்
பாலானோர் போதைப்
பொருள் கடத்தியவர்கள் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment