திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள
அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.
279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் முழுமையான கருவிகளைக் கொண்ட 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் உள்ளன.
நவீன மருத்துவ ஆய்வு கூட, பரிசோதனை வசதிகள், மருந்தகம், ஆகியவற்றுடன் இரண்டு பிராண வாயு உற்பத்திக் கூடங்களும் இந்தக் கப்பலில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், பெரு, ஜப்பான் ஆகிய நாடுகளின் 800 கடற்படை மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்தக் கப்பலில் உள்ளனர்.
USNS Mercy எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை  திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது.
இதன்போது, திருகோணமலைப் பகுதியில் உள்ள பாடசாலைகள், மருத்துவனைகள், சமூக நிலையங்களில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top