பதுளைசெங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட
அபிவிருத்திப் பணிகள்
பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்
சவூதி கடன் நிதி உதவி மூலம்
9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது


பதுளைசெங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதியதலாவ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பையும் தென்னிலங்கையையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து வீதி அபிவிருத்திக்கான சவூதி கடன் நிதி உதவி மூலம் 9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது பதுளை செங்கலடி வீதியின் பிபிலை தொடக்கம் செங்கலடி வரையிலான 87கிலோ மீற்றர் நீளத்தைக்கொண்டது. பாணந்துறை, காலி, தங்காலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, பசறை, லுணுகலை, பிபிலை, பதியதலாவ, ஹற்றன், கண்டி, ஹஸலக, மஹியங்கனை, மஹாஓயா, தம்பிட்டிய ஆகிய பெரும் நகரங்களை இணைக்கின்றது.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஸல் காசிம், அனோமா கமகே மற்றும் ஸ்ரீ யானி விஜயவிக்ரம உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top