சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை
கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின்
பொறியியலாளர்கள் தலைமையிலான குழு
நேரில் ஆய்வு

சாத்தியவள அறிக்கையை விரைவில் நாம் தாயாரித்து அமைச்சரிடம் கையளிப்போம் எனத் தெரிவிப்பு


சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையை  தயாரிப்பதற்கு என கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் பணிப்புரையின் கீழ் அமைச்சின் பொறியியலாளர்கள் தலைமையிலான குழுவொன்று இன்று 2018-09-11 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை சாய்ந்தமருது முகத்துவாரப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டது.
கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் பொறியியலாளர் நிபுன சொய்ஸா இக்குழுவுக்கு தலைமை வகித்திருந்தார்.
சாய்ந்தமருதை அண்மியுள்ள  கடலில் பல எண்ணிகையான படகுகள் கடலில் நங்கூரம் இடப்பட்டிருப்பதை நாம் கண்டோம். இப்பிரதேச மீனவர்களுக்கு படகு தரிப்புத்துறை அவசியம் என்பதை உணர்கின்றோம்.
கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் பணிப்புரையின் கீழ் சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையை விரைவில் நாம் தாயாரித்து அமைச்சரிடம் கையளிப்போம்.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மீனவர்களின் சார்பாகவே திட்ட அறிக்கையை தயாரிப்போம். டீசல்,ஒயில்,புகை என்பன வெளிப்படும் ஆதலால் படகு தரிப்புத்துறை அமைப்பதற்கென சூழல் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியும் எமக்கு தேவைப்படும் என குழுவினரால் தெரிவிக்கப்பட்ட்து.
சாய்ந்தமருதில் படகு தரிப்புத்துறை அமைப்பதற்கு முகத்துவாரத்திலுள்ள பாலம் உயர்த்தப்படல் வேண்டும். முகத்துவாரம் ஆழமாக்கப்படல் வேண்டும் என்பன் போன்ற விடயங்கள் கவனிக்கப்பட்டதுடன் மீனவர்களின் நலன் கருதி பல திட்டங்களை இவ்விட்த்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் குழுவினரிடம் மீனவர்களின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட்து.
இக்குழுவில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் மகனும் கலந்து கொண்டிருந்தார்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top