பேரணி தொடர்பில்
சபையில் அமளிதுமளி
நாடாளுமன்ற நடவடிக்கைகள்
நாளை மதியம் வரையில் ஒத்திவைப்பு
மஹிந்த
அணியினருக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும்
இடையே நாடாளுமன்றத்தில்
இன்று கடும்
வாக்குவாதம் ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் நாளை
மதியம் ஒரு
மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றமானது
இன்று பிற்பகல்
ஒரு மணிக்கு
சபாநாயகர் கரு
ஜயசூரிய தலைமையில்
கூடியது.
சபை
கூடியபோது மஹிந்த
அணியினரால் நாளை கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது
போராட்டத்தை முடக்குவதற்கு அரசு முற்படுகின்றது என
மஹிந்த அணி
உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். நீதிமன்றத்
தடை உத்தரவு
பெறப்பட்டுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதை
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நிராகரித்தனர்.
ஜனநாயக ரீதியில்
போராடுவதை அரசு
தடுக்காது எனவும்
அறிவித்தனர்.
இவ்வாறு
இரு தரப்பினருக்கும்
இடையே சுமார்
20 நிமிடங்களுக்கு மேலாக கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மஹிந்த அணி
உறுப்பினர்கள் சபாபீடத்தை நோக்கி வந்தனர். ஆளுங்கட்சியினர்
பொய்யுரைப்பதாகவும் அவர்கள் கோஷம்
எழுப்பினர்.
இதேவேளை,
ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு இறங்கினார்கள். இதனால்,
சபைக்குள் பெரும்
கூச்சல் குழப்பம்
ஏற்பட்டது. இதனால், சபையை சபாநாயகர் நாளை
மதியம் வரை
ஒத்திவைத்தார்.
இதேவேளை,
ஒன்றிணைந்த எதிரணியினர் நாளை (05) கொழும்பில் ஏற்பாடு
செய்துள்ள எதிர்ப்புப்
பேரணி தொடர்பில்
உத்தரவொன்றை வழங்குமாறு பொலிசாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்,
நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தங்களுக்கு
கிடைத்துள்ள புலனாய்வுத் தகவலுக்கு அமைய, கொழும்பு
மலலசேகர மாவத்தையில்
அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தை, பேரணியில்
ஈடுபடுவோர் சுற்றிவளைக்கப்போவதாக தெரிவித்து,
பேரணிக்கு எதிராக
உத்தரவொன்றை வழங்குமாறு, கறுவாத்தோட்ட பொலிசார் முன்வைத்த
கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்
நிராகரித்துள்ளது.
அது
தவிர, வெலிக்கடை
மற்றும் கொள்ளுபிட்டி
பொலிசார் நீதிமன்றில்
விடுத்த கோரிக்கைகளும்
நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment