லண்டனில் சீக்கிய ராணியின் நெக்லஸ்
ரூ.1¾ கோடிக்கு ஏலம்
   
லண்டனில் சீக்கிய ராணியின் பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன நெக்லஸ் ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது.
கடந்த 1843-ம் ஆண்டில் பஞ்சாபை ஆண்ட மன்னர் ரஞ்சித்சிங்கின் மனைவி ஜிந்தன் கவுர். மகாராஜா ரஞ்சித்சிங் ஆங்கிலேயருடன் போரிட்டு தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராணி ஜிந்தன் கவுர் அங்கிருந்து தப்பி நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு சென்றார்.
அங்கு அவரை நேபாள மன்னர் கைது செய்து வீட்டு காவலில் வைத்தார். பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து சென்றார். அப்போது தன்னுடன் விலை உயர்ந்த நெக்லசையும் எடுத்து சென்றார். பச்சை மரகத கல் மற்றும் முத்துக்களால் ஆன அந்த நெக்லஸ் கலை நயத்துடன் கூடியது.
அந்த நெக்லஸ் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அது கடுமையான போட்டிக்கு பின் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு (1,87,000 பவுண்டு) ஏலம் போனது.
ஆனால் அதை ஏலம் எடுத்தவர் விவரம் அறிவிக்கப்படவில்லை. இந்த நெக்லஸ் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு ஏலம் போகும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ரூ.1¾ கோடிக்கு ஏலம் போனது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top