ஜமால்
கொலைக்கு காரணமானவர்கள்
கடுமையாக
தண்டிக்கப்படுவார்கள்:
சவூதி
இளவரசர் முஹம்மது பின் சல்மான்
ஜமாலின் மரணத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் கடுமையாகத்
தண்டிக்கப்படுவார்கள் என்று சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான்
தெரிவித்திருக்கிறார்.
பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கில் துருக்கி வெளியிட்ட
ஆதாரங்களின் அடிப்பைடையில் சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு எதிராகப்
பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சவூதி
இளவரசர் முஹம்மது பின் சல்மான் பேசும்போது, ” சவூதி மக்கள் அனைவரும் வருந்தும்படி இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக்
குற்றத்துக்குக் காரணமானவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனை பெற நான் உறுதியாக
இருக்கிறேன். நீதியே நிச்சயம் வெல்லும்.
ஜமாலின் கொலையைப் பயன்படுத்தி துருக்கி, சவூதி இடையே மோதல் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர்”
எனத் தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி தூதரக
அலுவலகத்தில் கொல்லப்பட்ட ஜமாலின் கொலை வழக்கில் தொடர்புடைய சவூதியைச் சேர்ந்த 15
பேரின் பெயரை துருக்கி கடந்த வாரம் வெளியிட்டது.
ஜமாலை சவூதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி
உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.
துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின்
விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக
கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து
ஜமால் கொல்லப்பட்டதை சவூதி ஒப்புக்கொண்டது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவூதிக்குப் பெரும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment