அம்பாந்தோட்டையில் 1200 வீடுகள்
இந்தியா அமைத்துக் கொடுக்கிறது !
அம்பாந்தோட்டையில்
இந்தியாவின் உதவியுடன் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு உடன்பாடு நேற்று
அம்பாந்தோட்டையில் கையெழுத்திடப்பட்டது.
இந்தியத்
தூதுவர் தரன்ஜித்சிங்
சந்துவும் வீடமைப்பு
மற்றும் நிர்மாண
அமைச்சின் செயலாளர் பேனாட் வசந்தவும்
இந்த உடன்பாட்டில்
கையெழுத்திட்டனர்.
இந்த
நிகழ்வில் வீடமைப்பு
அமைச்சர் சஜித்
பிரேமதாஸவும்
கலந்து கொண்டார்.
இந்த
திட்டத்தின் கீழ், 600 மில்லியன் ரூபா செலவில்,
50 மாதிரிக் கிராமங்களில், 1200 வீடுகளை
இந்தியா அமைத்துக்
கொடுக்கவுள்ளது.

0 comments:
Post a Comment