பொத்துவில் மக்கள் வங்கி கிளையில் கடமையாற்றி
ஓய்வு பெற்ற முகாமையாளர்
சுபைர் ஹாஜி வபாத்தானர்.
பொத்துவில் மக்கள் வங்கி கிளையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முகாமையாளர் எஸ்.எம். சுபைர் ஹாஜி
இன்று (13.10.2018) காலை 5.40 மணியளவில் கொழும்பில் சிறி ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பொத்துவில் பிரதேச அபிவிருத்தக்கு
பல்வேறு வகையிலும்
பெரும் பங்காற்றியவர். அதேபோன்று பொத்துவில் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவராக செயற்பட்ட காலத்தில்
மர்ஹூம் சதகத்
ஹாஜியார் அவர்களுடன்
இணைந்து பொத்துவில்
பெரிய பள்ளிவாசல்
கட்டுமானப் பணிக்கான முயற்சியில் ஈடுபாடு காட்டியிருந்தார்.
அதன் பேறாய்
அப்பள்ளிவாசல் தற்போது அழகிய கம்பீரத் தோற்றத்துடன்
காட்சியளிக்கிறது.
அன்னாருக்கு
ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்வான சுவர்க்கத்தை
அருளுவதற்கு வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

0 comments:
Post a Comment