வடமேல் மாகாணத்திலும்
 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை
இன்று முதல் நடைமுறை

வடமேல்மாகாணத்திலும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவரசநிலைமையின் போது 1990 சுகப்படுத்தும் இந்த சேவை கட்டணமின்றி செயற்படவுள்ளது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் 2016ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய சேவை , இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.
இந்த சேவை 2018 ஜுலை மாதம் வடமாகாணத்திற்கும் ,ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணத்திற்கும் ,செப்டம்பர் மாதம் வடமத்திய மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இதுவரை 6 இலட்சத்து 99ஆயிரத்து 979 அழைப்புக்கள் கிடைக்கப்பெற்று 1இலட்சத்து 15ஆயிரத்து 641 தடவைகள் அம்பியுலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சை தேவைப்படும் 1 இலட்சத்து 4 ஆயிரத்து 203 நோயார்களை இதுவரையில் இச் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top