இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான
கப்பற் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு
இலங்கை ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்
ராஹூல் காந்திக்கும் இடையே கலந்துரையாடல்
இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பற் போக்குவரத்தை
உறுதிப்படுத்துவதற்கு இலங்கை ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவிற்கும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹூல் காந்திக்கும் இடையே
கலந்துரையாடல் இடம்பெற்றது.
புதுடில்லி நகர தாஜ் ஹோட்டலில் இன்று இந்த சந்திப்பு
இடம்பெற்றது.
காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி
மன்மோகன் சிங், சோனியா காந்தி
மற்றும் ஆனந்த ஷர்மா ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதுடன், பிராந்திய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள்
தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கையில் செயற்படுத்தப்படும் சமூக நலனோம்புகை
வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் காங்கிரஸ் பிரதிநிதிகள்
இதன்போது ஆர்வம் காட்டினர்.
எதிர்கால ஆசியாவின் தோற்ற அமைப்பு மற்றும் செயல்திறன்
தொடர்பாகவும், தீவிரவாதத்தை
ஒழிப்பதன் தேவை தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க ராஹூல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தூதுக் குழுவினருக்கு அழைப்பு
விடுத்ததுடன், அவர்கள்
நன்றியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டனர்.
புதுடில்லி நகர ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருரதரப்புப்
பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
அர்ஜூன ரணதுங்க, இளைஞர் அலுவல்கள்,
கருத்திட்ட முகாமைத்துவம்
மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச
வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
சித்ராங்கனீ வாகீஷ்வர மற்றும் பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி
ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment