கல்முனை பொதுச் சந்தை நவீனம் அடையுமா?
கல்முனை பொதுச் சந்தை நவீனமடையுமா?
சாய்ந்தமருது தோணா வேலைத் திட்டம் நிறைவேறுமா?
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்புக்கு தீர்வு வருமா?
மாயக்கல்லி விவகாரம் தீர்க்கப்படுமா?
பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையம் கிடைக்குமா?.
வட்டமடு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுமா?
ஆலிம்சேனை மக்களின் காணிப்பிரச்சினை முடிவுறுமா?
கல்முனை, சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிறைவேறுமா?
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படுமா?
சம்மாந்துறை விவசாயிகளின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?
கல்முனையில் “தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள விளையாட்டு மைதானம் வழங்கப்பட்ட வாக்குறுதிப்படி நிறைவேற்றப்படுமா?
இவ்வாறெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பி பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த அம்பாறைப்
பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திலிருந்த பல பிரதேசங்கள் மஹிந்த ஆட்சியிலும் அபிவிருத்தி அடையவில்லை. இந்த நல்லாட்சி மூன்று வருடங்களைக் கடத்தியும் இந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்..
இப்பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் காங்கிரஸை நம்பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக எண்ணிக்கையான மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வாக்களித்தனர்.
இப்பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முஸ்லிம் காங்கிரஸை நம்பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக எண்ணிக்கையான மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வாக்களித்தனர்.
கல்முனை நகரமும் அம்பாறை, கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேசங்களும் அபிவிருத்தி காண வேண்டும். அம்பாறை, திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் மீனவர்களினதும், விவசாயிகளினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும்.
இம்மாவட்டங்களிலுள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதற்கும் இப்பிரதேசத்திலுள்ள மக்களின் குறைகள் நீங்கவும் இப்பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகளை இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு வரவழைத்து அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவேண்டும் என கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மழை பெய்யும் காலத்தில் கல்முனை பொதுச் சந்தையின் அலங்கோலம் |
|
|
|
0 comments:
Post a Comment