தீவிரவாத குற்றச்சாட்டு
தொடர்பில்
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட
இலங்கை மாணவர் கமெர் நிசாம்தீனுக்கு
எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்
தீவிரவாத
குற்றச்சாட்டு தொடர்பில் அவுஸ்திரேலியாவில்
கைது செய்யப்பட்ட
இலங்கை மாணவர்
முஹம்மட் கமெர்
நிலார் நிசாம்தீனுக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை
அந்நாட்டு பொலிஸார் வாபஸ்
பெற்றுள்ளனர்.
அவர்
மீது, சிட்னி
ஒபேரா ஹவுஸ்
மீது தாக்குதல்
மற்றும் அவுஸ்திரேலிய
பெண் அரசியல்வாதி ஒருவரை
கொல்ல சதித்திட்டம்
தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளும்
முன்வைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி
அவர் கைது
செய்யப்பட்டிருந்தார்.
நான்கு
வாரங்கள் விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த
செப்டெம்பர் 28 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்
அவருக்கு எதிராக
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பலவீனமாக காணப்படுவதாக அவரது சட்டத்தரணி மொஸ்தபா
கெர் ( Moustafa Kheir) நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவருக்கு
எதிரான குறித்த
குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவர் எழுதிய தெரிவிக்கப்படும்
குறிப்பு புத்தகம் ஒன்றே அதற்கான
ஆதாரமாக பொலிஸாரால்
முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த
குறிப்பு புத்தகத்தில்தீவிரவாத
தாக்குதல், தொடர்பான குறிப்புகள் காணப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் குறித்த
குறிப்பு
புத்தகத்தில் காணப்படும் கையெழுத்து
அவருடையது என
நிரூபிக்க முடியாமல்
போனதையடுத்து, அவர் கடந்த மாதம் பிணையில்
விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது
அவர் மிக
பாரிய குற்றமிழைத்தவர்களை
தடுத்து வைக்கும்
சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படுவதோடு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த
நிலையில், அவர்
அவரது உறவினர்களை
சந்திப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கமெர்
நிசாம்தீன், சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து,
அவர் நிரபராதி
என தெரிவித்து
அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும்
பல்வேறு போராட்டங்கள்
பேரணிகள் என்பன
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கமெர்
நிசாம்தீன், அப்பாவி என்பதோடு அவர் நிரபராதி
என, உள்ளுராட்சி
சபை மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சரான பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.
கமெர், அமைச்சர்
பைசர் முஸ்தபாவின்
மருமகன் என்பது
குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment