ராகுல், சோனியா, மன்மோகன்
சிங்குடன்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச்
சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்
சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்
மன்மோகன்சிங், முன்னாள் மத்திய
அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமருடன், அமைச்சர்கள் அர்ஜூன ரணதுங்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க
ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன் போது கடல்சார் விவகாரங்கள் மற்றும் பொதுவான பிராந்திய
விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இலங்கைக்கு வருகை
தருமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ராகுல் காந்தி
ஏற்றுக் கொண்டுள்ளார்.


0 comments:
Post a Comment