புதிய அமைச்சரவை நியமனம்
 உடனடியாக இல்லையாம்



புதிய அமைச்சரவை நியமனம், உடனடியாக இடம்பெறாது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்திருந்தார். எனினும், அமைச்சர்கள் எவரும் இன்று பதவியேற்கவில்லை.

பதவியேற்பு நிகழ்வு முடிந்த கையுடன், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விட்டு, ஹிணுப்பிட்டிய கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், அவர் விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பியிருக்கிறார். இதனால்,இன்றிரவு  உடனடியாக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளையும், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறாது என்று மஹிந்த ராஜபக்ஸவுக்கு நெருக்கமான சகாக்களில் ஒருவரான, மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் நியமனம், அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியானதா என்ற சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில், உடனடியாக அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஸவுடன் இன்றிரவு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகப் பதிவு ஒன்றில், ‘என்ன ஜனநாயகம் இது திருவாளர் சிறிசேன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
More
All #UNP MPs in and around Colombo who could make it to Temple Trees here now. What the President has done is illegal. Is this the democracy you promised to usher in #SriLanka Mr Sirisena?


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top