இலங்கையில் பாரிய அரசியல் குழப்பம்
மஹிந்தவின் நியமனம் செல்லுமா?



மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்திருப்பது செல்லாது என்றும், ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்கிறார் என்றும், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு விட்டதாகவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

இதனால், இந்த ஆட்சிமாற்றம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமாயார் இப்போது ஆட்சியில் இருப்பது என்ற குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருக்கிறார் என்றும், அரசியலமைப்பு ரீதியாக அவரை அகற்ற முடியாது என்றும், ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் ஒரு பாரிய அரசியல் குழப்ப நிலையும், நிச்சயமற்ற சூழலும் தோன்றியிருக்கிறது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றுள்ளதை அடுத்து இலங்கையின் தென்பகுதியில் பல இடங்களில் பட்டாசுகள் கொளுத்திக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு, 2015இல் கொடுக்கப்பட்ட மக்கள் ஆணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டார் என்று செயற்பாட்டாளரான, நாலக குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top