ஜனாதிபதிக்கு ரணில் அவசர கடிதம்!
பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதாக அறிவிப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக தாம் தொடர்ந்தும் நீடிப்பதாக ரணில் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் 42 சரத்தின் 4ம் பிரிவின் அடிப்படையில் தாமே நாட்டின் பிரதமர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தாமே பிரதமர் என ரணில் விக்ரமசிங்க இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top