மக்கள் வங்கி, இலங்கை வங்கி
குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளது
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல



மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியிருடபப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வங்கிகளில் எந்தவித ஊழல்களும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வங்கிகளுக்கு பணிப்பாளர்சபை அங்கத்தவர்கள் இலங்கை மத்திய வங்கியின் நடைமுறைகளுக்கு அமைவாகவே நியமிக்கப்பட்டனர். கடந்த அரசாங்கத்தில் அதிகாரங்கள், தனிநபரிடம் குவிக்கப்பட்டிருந்தது. இந்த நபரினாலேயே பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பிணைமுறிகள் தொடர்பாக தொடர்ந்தும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வங்கி மறுசீரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா இதன்போத தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபைக்காக புதிய பணிப்பாளர் சபை தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி மற்றம் மக்கள் வங்கிகளில் ஸ்திரமற்ற தன்மை தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டளவில் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top