பட்டப்பகலிலும் வெளிச்சம் தரும் தெரு லாம்புகள்
கல்முனை மாநகர மேயரே இது உங்களின் கவனத்திற்கு
கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் தெரு லாம்புகள் பட்டப்
பகலிலும் எரிந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
இன்று 22 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு பட்டப் பகலிலும்
இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் இப்புகைப்படங்கள் எம்மால் எடுக்கப்பட்டன.
பிரதான வீதி, ஜீ.எம்.எம்.எஸ் வீதி, கடற்கரை வீதி, தோணா உள்வீதி என்பன போன்ற
வீதிகளில் இவ்வாறு பட்டப்
பகலில் தெரு லாம்புகள் எரிந்து கொண்டிருந்தன.
இத் தெருலாம்புகள் பகல் 12.00 மணிக்கும் எரிந்து கொண்டிருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இத் தெருலாம்புகள் பகல் 12.00 மணிக்கும் எரிந்து கொண்டிருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
கல்முனை மாநகர மேயரே இது உங்களின் கவனத்திற்கு

0 comments:
Post a Comment