கண்டி வைத்தியசாலைக்கு 203 பேர்ச்;
கண்டி ரபீக் ஹாஜியார் ஜனாஸா நல்லடக்கம்
சன்மார்க்க
பணிகளில் முக்கிய
பதவி வகித்து
வந்தவரான கண்டி ரபீக்
ஹாஜியார் காலமாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்
இவரினது
ஜனாஸா நேற்று முன்தினம்
காலை 8 மணியளவில்
கண்டி அணிவத்தை
வீட்டிலிருந்து, எடுத்துச் செல்லபட்டு, மக்கள் பார்வைக்காக கண்டி,
கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல்
மஸ்ஜிதில் வைக்கப்பட்டு,
காலை 10.00 மணியளவில் தொழுவிக்கப்பட்டு,
கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜித் மையயவாடியில்,
நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கையின்
இரண்டாவது தேசிய
வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு மிக நவீனமாக அபிவிருத்தி
செய்யப்படவுள்ள கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மேற்படி
ரபீக் ஹாஜியார்
குடும்பம் சுமார்
203 பேர்ச் காணியை கடந்தவாரம் அன்பளிப்பு செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment