ஈரானில் 5300 கோடி பீப்பாய்
கச்சா எண்ணையுடன்
புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு
ஈரானில் 2400 சதுர
கிலோமீட்டர் பரப்பளவில் 5300 கோடி பீப்பாய் கச்சா
எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன்
ரவுகானி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில்
பெற்றோல், டீசல் உற்பத்திக்கு
தேவையான கச்சா
எண்ணெய் வளம்கொண்ட
நாடுகளின் பட்டியலில்
நான்காவது இடத்தில்
உள்ள ஈரான்
பெட்ரோலிய பொருட்களை
ஏற்றுமதி செய்யும்
நாடுகள் என்ற
அமைப்பை உருவாக்கியது.
சவுதி அரேபியா
உள்ளிட்ட வளைகுடா
நாடுகளை உள்ளடக்கிய
இந்த அமைப்பு
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெற்றோலிய பொருட்களுக்கான விலையை
நிர்ணயித்து வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள
பொருளாதார தடையால்
ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சமீபகாலமாக
ஈரான் தனது
நாட்டின் பெற்றோல் உற்பத்தியை
வெகுவாக குறைத்துக்
கொண்டுள்ளது.
இந்நிலையில்,ஈரானின்
தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர
கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய்
கச்சா எண்ணையுடன்
புதிய எண்ணெய்
வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரவுகானி
இன்று தெரிவித்துள்ளார்.
80 மீட்டர் ஆழத்தில்
கச்சா எண்ணெய்
சுரக்கும் இந்த
பெற்றோல் வயல் தொடர்பான
கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும்
பரிசு எனவும்
ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment