உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை
கிடைக்காதோருக்கு அறிவிப்பு
ஜனாதிபதி
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத
வாக்காளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானோர்
தமது உத்தியோகபூர்வ
வாக்காளர் அட்டைகளை
தமது பிரதேச
தபால் அலுவலகத்தில்
நவம்பர் மாதம்
16 ஆம் திகதி
மாலை 5.00 மணி
வரையில் மாத்திரமே
பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மா
அதிபர் ரஞ்சித்
ஆரிய ரத்ன
தெரிவித்துள்ளார்.
இதன்போது
தமது ஆள்
அடையாளத்தை உறுதி செய்வதற்காக தேசிய அடையாள
அட்டையை சமர்ப்பிக்க
வேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி
தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டையை
விநியோகிக்கும் பணி ஒக்டோபர் மாதம் 26 ஆம்
திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் விசேட
தினமாக நவம்பர்
மாதம் 3 ஆம்
திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ
வாக்காளர் அட்டைகளை
விநியோகிக்கும் பணிகள் நவம்பர் மாதம் 9 ஆம்
திகதியுடன் நிறைவடைந்தது.
0 comments:
Post a Comment