தேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார்
8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்





நாடு முழுவதிலும் உள்ள 12,856 வாக்களிப்பு நிலையங்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு 2 அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள இருவர்களுள் பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களுக்கு 2 ஆண் அதிகாரிகள் வீதமும் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள் மற்றும் ஆண் அதிகாரிகள் என்ற ரீதியிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கு அமைவாக 12,856 வாக்களிப்பு நிலையங்களுக்கு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள மொத்த பொலிஸாரின் எண்ணிக்கை 25,712 ஆகும். அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் நாடு முழுவதிலும் 3,043 நடமாடும் பொலிஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளது.

ஒரு நடமாடும் சேவையில் விசாரணை தரத்திலான ஒரு அதிகாரியும் (துணை பொலிஸ் பரிசோதகர் அல்லது பொலிஸ் பரிசோதகர் என்ற ரீதியில்) பொலிஸ் சார்ஜன் அல்லது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் என்ற வீதம் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு அமைவாக பொலிஸ் நடமாடும் சேவைக்காக நாடு முழுவதிலும் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை 6,086 ஆகும். இதற்கு மேலதிகமாக நடமாடும் பாதுகாப்பு சேவையும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளது. இவற்றில் ஈடுபடவுள்ள சிவில் பாதுகாப்பு பிரிவினரின் எண்ணிக்கை 6,086 ஆகும். சம்பந்தப்பட்ட தொகுதி பொறுப்பதிகாரிகளின் அறிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 43 ஆகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை 2,193 ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்குகள் எண்ணும் மத்திய நிலையம் ஒன்றிற்காக சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவரும் (சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது பொலிஸ் அத்தியட்சகர்) ஒருவர் கடமையில் ஈடுபடுவர். இதற்கு மேலதிகமாக விசாரணை தரத்திலான 5 அதிகாரிகளும் 5 பொலிஸ் சார்ஜனும் 40 பொலிஸ் கான்ஸ்டபிளும் வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையத்திற்காக பாதுகாப்பு நடைவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கு அமைவாக எதிர்வரும் சில தினங்களில் கழகம் அடக்கும் பணிகளில் 153 குழுக்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்படவுள்ளன.

54 முழு அளவிலான கழக அடக்க குழுக்களும், 99 ஓரளவு கழகங்களை அடக்கும் குழு என்ற ரீதியிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக ஒரு முழுமையான கழக அடக்க குழுவிற்காக விசாரணை தரத்திலான ஒரு அதிகாரியும், பொலிஸ் சார்ஜன் ஒருவரும், 8 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் ஈடுபடுத்தப்படுவர். இதே போன்று ஓரளவிற்கு கழகங்களை அடக்கும் குழுவிற்கு விசாரணை தரத்தில் ஒரு அதிகாரியும் பொலிஸ் சார்ஜன் ஒருவரும், 5 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என்ற ரீதியிலும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்கு அமைவாக 153 கலகங்களை அடக்கும் குழுவிற்காக 1,233 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது வரையில் நாடு முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 137 பொலிஸ் வீதி தடைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிகமாக 190 வீதி தடைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிரந்தர வீதி தடைகள் 137 இற்காக ஒரு வீதி தடைக்கு விசாரணை தரத்தில் அதிகாரி ஒருவரும் பொலிஸ் சார்ஜன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்ற ரீதியிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக 190 பொலிஸ் வீதி தடைகளுக்காக ஒரு வீதி தடைக்கு விசாரணை தரத்திலான அதிகாரி ஒருவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவரும், 4 பொலிஸ் கான்ஸ்டபிள்களும், சிவில் பாதுகாப்பு ஊழியர் வீதமும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கு அமைவாக மொத்த வீதி தடைக்கான கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை 1,688 ஆகும். இந்த வீதி தடைக்காக கடமையில் ஈடுபடவள்ள சிவில் பாதுகாப்பு ஊழியர்களின் உண்ணிக்கை 190 ஆகும்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top