பொய் வாக்குறுதிகளால்
நான் மக்களை ஏமாற்ற மாட்டேன்.
எனது தந்தையின் வழியில் பயணித்து
மக்களுக்கு சேவையாற்றுவேன்
கல்முனையில் சஜித்
நாட்டில் இனவாத்தை ஒழித்து மூவின மக்களும் ஒற்றுமையாக
வாழுகின்ற சூழலை உருவாக்கி எனது தந்தையின் வழியில் பயணித்து மக்களுக்கு
சேவையாற்றுவேன். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தை சர்வதேச மைதானமாக மாற்றுவேன். நகர
அபிவிருத்தியின் போது கல்முனை நகர் புதிய வெளிச்சத்தை பெறும். வியாபர கட்டிட
தொகுதி, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுன, நட்பிட்டிமுனை, பாண்டிருப்பு
பிரதேசங்களில் எதிர்கால எனது அரசாங்கத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படும் இவ்வாறு
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை (09) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றும் போது
மேலும் தெரிவித்ததாவது,
தற்போது எல்லோருக்கும் கல்முனை பற்றி ஓர் அக்கறை, ஆசை வந்துள்ளது. இதுவரை
காலமும் யாருக்கும் இப்படியானதொரு ஆசை வந்ததில்லை. இந்த தேர்தல் காலம் காரணமாக
கல்முனையை சிலர் ஆசை வைக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளால் நான் மக்களை ஏமாற்ற
மாட்டேன். எனது தந்தையின் வழியில் பயணித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்.
அபிவிருத்தி என்று வருகின்றபோது கல்முனை சந்தாங்கேணி
மைதானத்தை சர்வதேச மைதானமாக மாற்றுவேன். அதேபோல் நகர அபிவிருத்தியின் போது கல்முனை
நகர் புதிய வெளிச்சத்தை பெறும். வியாபர கட்டிட தொகுதி, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுன, நட்பிட்டிமுனை, பாண்டிருப்பு
பிரதேசங்களில் எதிர்கால எனது அரசாங்கத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வேன் என
உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இப் பிரதேசத்தில் விசேடமாக கரைவாகு வட்டையில் நீர்ப்பாசன
திட்டத்தை அறிமுகப்படுத்தி இதனுடாக இப்பிரதேச விவசாயிகளின் விவாசாயத்துறையை மேம்படுத்துவேன். விவசாயிகளுக்கு
முற்றிலும் இலவசமாக பசளை வழங்குவேன்.
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசத்தில் மீன்பிடி துறை இறங்கு துறைமுகம்
அமைப்பேன்.மேட்டு வட்டை மாவடிப்பள்ளிக் கிடையில் விசேட மாற்று வழிப் பாதை ஒன்றை
உருவாக்குவேன் என உறுதியாக கூறுகின்றேன்.
இனவாதம், மதவாதத்தைப் பரப்புமாறு புத்தபெருமான் ஒருநாளும் போதித்ததில்லை. பௌத்தத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து
மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் இந்நாட்டிற்குள் வாழும்
அனைத்து மக்கள் பிரிவினரும் இன, மத வேறுபாடுகள் இன்றி வாழ்வதற்காக, இனவாதம், மதவாதத்தை முழுமையாக ஒழித்து, நீதியை மதிக்கும் யுகத்தை 16ஆம் திகதி பெறும் வெற்றியுடன்
நடைமுறைப்படுத்துவேன் இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
0 comments:
Post a Comment